உடுமலையை பழனி மாவட்டதில் சேர்க்க வேண்டாம்.!!!
அனைவருக்கும் வணக்கம்,
புதிதாக பழனி மாவட்டம் உருவாக இருப்பதாக ஊடக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது இதுகுறித்து உண்மை தன்மை இதுவரை தெரிவிக்கப்படவில்லை. பழனி மாவட்டம் உதயமாகிறது, அதனுள் உடுமலைப்பேட்டை மடத்துக்குளம் பகுதிகள் இணைக்கப்படும் என்று தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர் இந்த குழப்பத்திற்கு முடிவு காணும் வகையிலும் உடுமலை மடத்துக்குளம் பகுதியானது கோவை மண்டலத்தில் உள்ளது பழனி ஒட்டன்சத்திரம் பகுதிகள் தென் மாவட்ட பகுதிகளாகவும் மதுரை மண்டலத்தில் உள்ளது எனவே தென் மாவட்ட பகுதிகளில் உடுமலை மடத்துக்குளம் பகுதிகளை இணைக்க வேண்டாம் என பொதுமக்களின் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.
நன்றி..